கவர்ச்சி, ஆக்ஷன் என வித்தியாசமா நடிக்க நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - நடிகை சமந்தா ஓபன் டாக்
தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.
கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது.
இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது. இதனையடுத்து, சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை சமந்தா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்தப் பேட்டியில், கவர்ச்சியான கதாபாத்திரம் என்றாலும், ஆக்ஷன் கதாபாத்திரம் என்றாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வயதும், அனுபவமுமே இதற்கு காரணம். இதற்கு முன்னர், இந்த நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போது எனக்கு முழு நம்பிக்கை வந்துள்ளது என்று பேட்டி கொடுத்துள்ளார்.