சிங்கிள் ஹீரோயினியாக கலக்கப்போகும் சமந்தாவின் ‘யசோதா’- மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Samantha
By Nandhini May 05, 2022 08:21 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை. அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

கடந்த 28ம் தேதி நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி அள்ளியுள்ளது.

இந்நிலையில், சமந்தா தற்போது கிருஷ்ணா பிரசாத் தயாரித்துள்ளார் ‘யசோதா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் தெலுங்கு இந்தி தமிழ் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் படமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஹரன் என இருவர் எழுதி இயக்கியுள்ளனர். இப்படத்தில், தமிழ் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்திருக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் சமந்தா ஒரு மருத்துவமனையில் இருப்பது போன்றும் ஒரு புறாவை பிடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றனர். ‘யசோதா’ படம் ஒரு திரில்லர் கதையாக இருக்குமோ என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.