35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் - வெளியான தகவல் - ரசிகர்கள் ஆச்சரியம்

Samantha
By Nandhini May 02, 2022 11:44 AM GMT
Report

தென்னிந்திய சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாகவும், ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் நடிகை சமந்தா.

இவருடைய சிரிப்பிலும், அழகிலும் மயங்காதவர் யாருமில்லை.

அந்த அளவிற்கு கொள்ளையழகில் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடிக்கிறார் நடிகை சமந்தா.

வாழ்க்கையில் எவ்வளவு தோல்விகள் வந்தாலும்... அதை தைரியத்துடன் போராடி தனக்கென பாதையை வகுத்து அதில் வெற்றி பெறுகிறார் சமந்தா.

நடிகை சமந்தா தன்னுடைய 35-வது பிறந்த நாளை கடந்த 28ம் தேதி கொண்டாடினார்.

பிறந்தநாளான அன்று விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தைப் பார்த்த அவரது ரசகிர்கள் என்ன அழகுடா சமந்தா... 35 வயதில் இப்படி மின்னுகிறாரே... சமந்தாவுக்காகத்தான் இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு போனோம் என்று கூட அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அந்த அளவிற்கு அவருடைய அழகும், திறமையும் கூடிக்கொண்டே போகிறது.

இந்நிலையில், 35 வயதிலும் கட்டழகியாக மிளிரும் சமந்தாவின் அழகு குறிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

டே அண்ட் நைட் ஸ்கின் கிரீம், காலை முதல் வேலையாக ஆப்பிள் சீடர் வினிகர், இருவேலை ஸ்டிரீமிங், விட்டமின் தெரப்பி அனைத்திற்கும் மேலாக யோகா மற்றும் கடினமான ஜிம் ஒர்க் அவுட் மேற்கொள்கிறார். மேலும், தினமும் பச்சை காய்கறிகள், ஹாப்பி மைன்ட் உள்ளிட்டவற்றின் மூலம் தனது அழகை மேலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு வருகிறாராம் சமந்தா.     

35 வயதில் ஜொலிக்கும் சமந்தாவின் அழகு ரகசியம் இதுதானாம் - வெளியான தகவல் - ரசிகர்கள் ஆச்சரியம் | Samantha