கெட்டவார்த்தை டீ ஷர்ட் அணிந்து வந்த நடிகை சமந்தா - யாரை திட்டுகிறார்? வைரலாகும் புகைப்படம்
தெலுங்கு சினிமாவில் குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் அந்த டீ ஷர்ட்டை அணிந்தார் சமந்து என்கிறார்கள் நெருங்கிய தோழிகள்.. யார் அவர்..?
சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரும், காதல் கணவர் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் பல விதமான சர்ச்சைகளும், கருத்துக்களும் உலா வந்துக்கொண்டிருக்கிறது. மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா ஆன்மீகம், சுற்றுலா சென்று மனதை அமைதிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், நடிகை சமந்தா மிக மோசமான கெட்டவார்த்தை பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வலம் வந்த விவகாரம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக வருகிறது.
அதாவது தெலுங்கு சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நபரை திட்டும் தொனியில்தான் சமந்து இப்படி சம்பந்தமே இல்லாமல் கேவலமான வார்த்தைகளுடன் கூடிய டீ ஷர்ட்டை அணிந்தார் என்று சொல்லப்படுகிறது.
நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையில் சமீபத்தில் சூழ்நிலை கொஞ்சம் சுகமானது. ஆனால் இதை ஒரு நபர் இடையில் புகுந்து குழப்பிவிட்டாராம். அவரை திட்டவே இந்த டீ ஷர்ட்டாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.