கடுமையான உடற்பயிற்சி செய்யும் சமந்தா - வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ
நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ நடித்து வந்தார். இவருடன் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.
இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தபோது, நடிகை சமந்தாவிற்கு, நடிகை நயன்தாரா நட்பின் அடையாளமாக ஒரு அழகான காதணியை பரிசாக கொடுத்தார்.
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் இப்படத்தில் இடம்பெறும் டூடூடூ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாராவுடன் இணைந்து விஜய்சேதுபதி குத்தாட்டம் போட்டுள்ள இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.