தாலிபான்களை இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்ட சமாஜ்வாடி எம்.பி. மீது தேசதுரோக வழக்கு பாய்ந்தது..
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் தலிபான்களை ஒப்பிட்ட சமாஜ்வாடி எம்.பி. மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றி தற்போது புதிய ஆட்சியை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்வு உலக நாடுகளை பதட்டம் அடைய வைத்துள்ளது இந்த நிலையில் தலிபான்களை சம்பல் தொகுதி சமாஜ்வாடி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க் பாராட்டியுள்ளார்.
மேலும் இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபோது, நம் நாடு சுதந்திரத்துக்காக போராடியது. இப்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானுக்கு விடுதலை அளித்து அந்நாட்டை ஆட்சி செய்ய விரும்புகிறது.
ஆப்கானில் தலிபான் ஒரு படை, ஆப்கானிஸ்தான் மக்கள் அதன் தலைமையின் கீழ் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஷபிகுர் ரஹ்மான் பார்க் தலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் ஓம்வீர் கடன்வான்ஷி, ராஜேஷ் சிங்கால் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் ஷபிகுர் ரஹ்மான் பார்க்கு எதிராக புகார் கொடுத்தனர்.
இதனையடுத்து போலீசார், ஷபிகுர் மீது 124 ஏ (தேசத்துரோகம்), 153ஏ (குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் 295ஏ (மத உணர்வுகளை புண்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.