பயிற்சி முகாமில் இணைந்த சாம் கரன்..CSK வெளியிட்ட மாஸ் வீடியோ- வைரல்!

Chennai Super Kings Cricket Viral Video Sports
By Vidhya Senthil Mar 18, 2025 10:34 AM GMT
Report

சாம் கரன் அணியில் இணைந்ததை வரவேற்கும் விதமாக சென்னை அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை அணி 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

பயிற்சி முகாமில் இணைந்த சாம் கரன்..CSK வெளியிட்ட மாஸ் வீடியோ- வைரல்! | Sam Curran Joined Csk Video Goes On Viral

இதனையடுத்து மறுநாள் ஞாயிறு அன்று நடைபெற உள்ள மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.

 வீடியோ

இந்த நிலையில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் - சாம் கரன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு சென்னை அணியின்  இணைந்துள்ளார். சாம் கரன் அணியில் இணைந்ததை வரவேற்கும் விதமாக சென்னை அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் விஜயின் “மாஸ்டர்” மற்றும் அஜித்தின் “குட், பேட் அக்லி” பட டிரைலரின் ஸ்டைலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை சென்னை அணியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.