சுட்டி குழந்தை சாம் கரன் விலகல் : அதிர்ச்சியில் சிஎஸ்கே

IPL 2021 CurranSM Kadaikutty Singam
By Irumporai Oct 05, 2021 01:08 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரௌண்டர் சாம் கரன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன .

சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பு கூறுகையில், "காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்களிலிருந்து சாம் கரன் விலகுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது என்றும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் சாம் கரன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்:

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். அவர்கள் நிச்சயம் கோப்பையை வெல்வார்கள்" என சாம் கரன் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி சாம் கரன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிளே ஆஃப் சுற்றை நெருங்கி வரும் நிலையில் சிஎஸ்கேவின் சாம்கரன், விலகியிருப்பது சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.