4000 கோடி கூட சொத்து வேண்டாம்..விஜய்யின் பாசத்தில் விழுந்த சமந்தா..!!

Samantha Tamil Cinema Vijay Deverakonda Tamil Actors Tamil Actress
By Karthick Sep 25, 2023 07:42 AM GMT
Report

விஜய் தேவரகொண்டாவின் பாசத்தில் நடிகை சமந்தா விழுந்துவிட்டதாக சினிமா விமர்சகரின் கருத்து தற்போது வைரலாகி வருகின்றது.

சமந்தா

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

sam-and-vijay-devarakonda-going-to-get-married

பின்னர் அதிலிருந்து மீண்டும் சமந்தா மீண்டும் இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் சகுந்தலம், குஷி என இரண்டு படங்களும் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. குறிப்பாக சகுந்தலம் மிக பெரிய தோல்வி படமாக பார்க்கப்படுகிறது.தற்போது சினிமாவிற்கு பிரேக் விட்டுள்ள சமந்தா குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலுவின் கருத்து மிகவும் வைரலாகி வருகின்றது.

செய்யாறு பாட்டி

இது குறித்து செய்யாறு பாலு அளித்திருந்த பேட்டியில், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான குடும்பத்தின் மருமகளான சமந்தா, கருத்துவேறுபாடுகளின் காரணமாக அக்குடும்பத்தில் இருந்து பிரிந்துவிட்டார் என குறிப்பிட்டு, விவகாரத்தின் போது, நாகசைத்தன்யா ஜீவனாம்சம் எத்தனை கோடி வேண்டும் என்று ,கேட்க காசு எதுவுமே எனக்கு தேவையில்லை என்று தூக்கிப்போட்டுவிட்டு வந்தார் என தெரிவித்தார்.

sam-and-vijay-devarakonda-going-to-get-married

இந்த விஷயம் தான் விஜய்தேவரகொண்டாவின் மனதில் சமந்தா இடம் பிடிப்பதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்த செய்யாறு பாலு, இருவரும் திருமணம் செய்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி என்று கூற இந்த கருத்துக்கள் தற்போது வேகமாக பரவி வருகின்றது.