நக்சல்களின் கண்ணி வெடி தாக்குதலில் வீரமரணம் எய்திய தமிழக வீரருக்கு வீர வணக்கம் : மு.க.ஸ்டாலின்
சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சல்களின் கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி, மதுரையினை சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்சாமி வீர மரணம் அடைந்தார். மதுரையில் உள்ள பொய்கைப் பட்டி என்ற கிராமத்தைச்சேர்ந்த பாலுச்சாமி, இந்தோ திபெத்திய பாதுகாப்பு எல்லைப் படையில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த பாலுச்சாமிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வீர மரணம் அடைந்த பாலுச்சாமியின் உடல் விமானம் மூலம் பெங்களுரூ கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தரை மார்க்கமாக பொய்கைப்பட்டிக்கு வந்து சேரும். இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் பதிவில், நமது ராணுவத்தின் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமி அவர்களுக்கு வீரவணக்கம். அவரது குடும்பத்தினருக்கும் அவரது கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று, ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்எனத் தெரிவித்துள்ளார்.
நமது ராணுவத்தின் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் சேவையாற்றி, சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய தமிழக வீரர் மதுரை அழகர்கோவில் பாலுச்சாமி அவர்களுக்கு வீரவணக்கம்.
— M.K.Stalin (@mkstalin) February 26, 2021
அவரது குடும்பத்தினர் - கிராமத்தினரின் துயரத்தில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/Vj64MR14zu