உலகை உலுக்கிய பிரபல நாவலாசிரியர் மீது தாக்குதல் - கண்ணை குருடாக்கிய நபருக்கு மாபெரும் பரிசு..!

Iran
By Nandhini Feb 21, 2023 11:39 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை தாக்கி கண்ணை குருடாக்கிய நபருக்கு ஈரானிய அறக்கட்டளை பாராட்டி மாபெரும் பரிசை அறிவித்துள்ளது.

பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா ருஹோல்லா கொமேனி, ருஷ்டியின் புத்தகமான "தி சாத்தானிக் வசனங்கள்" வெளியிடப்பட்டது. அந்த புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு, ஈரானிய ஆட்சியாளரும், முஸ்லிம்களில் ஒரு பகுதியினரும் முகமது நபியைப் பற்றிய நாவலில் உள்ள சில பகுதிகளை நிந்தனை என்று குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, நாவலாசிரியர் ருஷ்டியை கொலை செய்பவருக்கு ஈரானிய அரசு பரிசு அறிவிக்கப்பட்டது. இதனால், தன் உயிருக்கு பயந்த ருஷ்டி 9 ஆண்டுகள் பிரிட்டிஷ் போலீஸ் பாதுகாப்பில் தலைமறைவாக இருந்தார்.

சல்மான் ருஷ்டி மீது கொடூரத் தாக்குதல்

இதனையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு நியூயார்க்கில் ஏரிக்கு அருகில் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, மேடையில் 75 வயதான பிரபல நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி 24 வயது இளைஞரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

இத்தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொடூர தாக்குதலில், ருஷ்டி ஒரு கண்ணை இழந்தார். மேலும், அவரது ஒரு கை பயன்படுத்த முடியாததாகிவிட்டது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நியூ ஜெர்சியைச் சேர்ந்த 24 வயதான ஷியா என்ற முஸ்லிம் அமெரிக்கர் என்பது தெரியவந்தது. இத்தாக்குதலில் அவர் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்டார்.

salman-rushdie-attacker-praised-iranian-foundation

தாக்குதல் நடத்தியவருக்கு பரிசு

இந்நிலையில், ருஷ்டியை தாக்கிய ஷியாவை ஈரானிய அமைப்பு வெளிப்படையாகப் பாராட்டியுள்ளது.

‘ருஷ்டியின் ஒரு கண்ணைக் குருடாக்கி, ஒரு கையை முடக்கி முஸ்லிம்களை மகிழ்வித்த இளம் அமெரிக்கரின் துணிச்சலான செயலுக்கு நாங்கள் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று தாக்கியவருக்கு வெகுமதி அளிக்க முடிவு செய்த ஈரானிய அறக்கட்டளையின் செயலாளர் முகமது எஸ்மாயில் ஜரேய் கூறினார்.

இந்தச் துணிச்சலான செயலை மதிக்கும் வகையில், சுமார் 1,000 சதுர மீட்டர் விவசாய நிலம் அந்த நபருக்கோ அல்லது அவரது சட்டப் பிரதிநிதிகளுக்கோ நன்கொடையாக வழங்கப்படும் என்று ஜரேய் மேலும் கூறினார்.

இந்த தாக்குதலுக்கு 1,000 சதுர மீட்டர் விவசாய நிலத்தை வெகுமதியாக வழங்குவதாக ஈரானிய அறக்கட்டளை உறுதியளித்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.