மாரடைப்பால் பிரபல நடிகர் மரணம் - சோகத்தில் ஆழ்ந்த சல்மான்கான்..!

Salman Khan
By Nandhini 2 மாதங்கள் முன்

உடல்பயிற்சி செய்யும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகரால் சல்மான்கான் சோகத்தில் மூழ்கியுள்ளார். 

பிரபல நடிகர்  சாகர் பாண்டே மரணம்

திரைப்படங்களில் வரும் பெரும்பாலான காட்சிகளில் பெரிய நடிகர்கள் நடிப்பது இல்லை. குறிப்பாக அவர்கள் சண்டை செய்யும்போதும், சாகசம் நிறைந்த ஸ்டண்ட் காட்சிகளிலும், அவர்களைப் போன்ற முகத்தோற்றம் கொண்டவர்கள் டூப்பாக நடிப்பார்கள்.

அப்படி பாலிவுட்டில் நடிகர் சல்மான் கானுக்கு 50க்கும் மேற்பட்ட படங்களில் டூப்பாக நடித்தவர் சாகர் பாண்டே. இவர் நடிகர் ஷாருக் கானுக்கும் டூப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜிம்மில் சாகர் பாண்டே உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே, அவரை ஜிம்மில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இத்தகவல், நடிகர் சல்மான் கானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Salman Khan