சல்மான் கான், தந்தை அமரும் இடத்தில் கிடந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு - நடந்தது என்ன? போலீசார் தீவிரம்
சல்மான் கான், தந்தை தினமும் உட்காரும் இடத்தில் கிடந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பைபும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான்
இந்தி சினிமா திரையுலகில் கொட்டிக்கட்டி உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சல்மான் கான். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கவுசல் -கத்ரீனா ஜோடியின் திருமண பரிசாக 3 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை பரிசளித்தார்.

மர்ம கடிதம்
இந்நிலையில், சல்மான் கான், தந்தை தினமும் உட்காரும் இடத்தில் கிடந்த மர்ம கடிதம் பெரும் பரபரப்பைபும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சல்மான் கான், தந்தை சலீம் கான் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நடைபயிற்சி மேற்கொண்டு விட்டு அமரும் பூங்கா இருக்கையில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில் சல்மான் கானுக்கும், அவருடைய தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இது குறித்து மும்பை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கடிதம் எழுதிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.