‘இவ்வளவு ரன்னெல்லாம் பத்தாதுடா’ - இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ரன்களை குவிக்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3 ஆம் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் இங்கிலாந்து அணியை விட 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா சதமும், புஜாரா அரைசதமும் அடித்தனர்.
இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் குறைந்தது 350 ரன்களாவது குவிக்க வேண்டும். அப்போது தான் இந்திய பந்துவீச்சாளர்களால் இங்கிலாந்து அணியை 250 ரன்கள் கூட எடுக்கவிடாமல் கட்டுப்படுத்த முடியும்” என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.