பெண்களின் எச்சிலை (உமிழ்நீர்) வைத்து கர்ப்ப பரிசோதனை - இங்கிலாந்தில் தொடக்கம்

London United Kingdom
By Thahir Jun 21, 2023 06:33 AM GMT
Report

உலகின் முதன் முதலாக எச்சிலை உமிழ்நீர் வைத்து கர்ப்ப பரிசோதனை செய்யும் திட்டம் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உமிழ்நீர் வைத்து கர்ப்ப பரிசோதனை 

இந்த சோதனை கொரோனா பரிசோதனைகளை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டது.

saliva pregnancy test in united kingdom

பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அவர்களின் உமிழ்நீரில் இருந்து கண்டறியும் வகையில் இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி அல்லாத 300க்கும் மேற்பட்ட பெண்களிடம்ட இஸ்ரேலில் மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு சாலிக்னோஸ்டிக்ஸ் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.