கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் "சம்பளம் கட்" - ரயில்வே அதிரடி அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கும் ஊழியர்கள் சம்பளம் நிறுத்தப்படும் என பாகிஸ்தான் ரயில்வே அமைச்சகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுபடுத்த பாகிஸ்தானில் தீவிரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரயில்வே அமைச்சகம் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா? என்பதை உறுதி செய்யுமாறு பாகிஸ்தான் ரயில்வே அனைத்து ரயில்வே பிரிவு தலைமையகத்திற்கும் தெரிவித்துள்ளது.
மேலும் ஊழியர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.