சரிந்து விழுந்த ராட்சத பாறை - வெடிவைத்து அகற்றிய அதிகாரிகள்
Salem
Yercaud
bigstone
By Anupriyamkumaresan
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்றிரவு சரிந்து விழுந்த ராட்சத பாறை வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் 40 அடி பாலம் அருகே சுமார் 200 டன் எடை கொண்ட ராட்சத பாறை நேற்றிரவு சரிந்து விழுந்தது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பெரிய அளவிலான பாறை என்பதால் அதனை உடைத்து அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால், பாறையில் 30 இடங்களில் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பி அதனை வெடிக்க செய்து பாறையை அகற்றினர்.