தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் உயிரிழந்த நபர் - துயரத்தில் மனைவி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் அதிக வெயில் காரணமாக ஒரு நபர் உயிர் இழந்துள்ளார்.
சுராஜி
சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுராஜி என்பவர் கடும் வெயிலால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 25 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வெள்ளி வேலை செய்து வந்த சுராஜி இந்த கூட்டத்திற்கு வருவதற்காக ண்பரிடம் பாஸ் பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

கூட்டத்தின் போது வெயில் தாக்கியதால் மயங்கி விழுந்த அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் துரதிர்ஷ்டமாக அவர் செல்லும் வழியிலேயே உயிர் இழந்தார்.

இவருடைய குடும்பம் இவரின் வருமானத்திலேயே தான் வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடும் துயரத்தில் உள்ளனர்.
அவரது மரணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபருக்கு 37 வயது என்பது குறிப்பிட தக்கது.