கோவிலுக்குள் நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர்... தடுத்த அர்ச்சகருக்கு நேர்ந்த கதி
சேலத்தில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவரால் அர்ச்சகர் ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணாநகர் பகுதியில் ஸ்ரீ சீதாராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதில் அர்ச்சகராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர் திமுக கவுன்சிலர் மஞ்சுளா மூலம் தனக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
கோயிலில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதால் கவுன்சிலர் மஞ்சுளா அடிக்கடி அங்கு செல்வது வழக்கம். அப்போது அவர் நைட்டி அணிந்துகொண்டு கோவிலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதை பார்த்ததும் அர்ச்சகர் கண்ணன் அதிர்ச்சியடைந்து கண்டித்ததோடு மட்டுமல்லாமல் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனை மனதில் வைத்துக்கொண்ட கவுன்சிலர் மஞ்சுளா தனது செல்வாக்கை பயன்படுத்தி அர்ச்சகர் கண்ணனை பணியில் இருந்து விடுவித்துள்ளார். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.