மனைவிக்கு வேறு ஒரு தொடர்பு - மனமுடைந்த கணவன் குழந்தைகளை கொன்று தற்கொலை
சேலத்தில் மனைவி அடிக்கடி யாருடனோ தொலைபேசியில் நீண்ட நேரம் பேசி வருவதால் மனமுடைந்த கணவன் இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் மங்கலம்பட்டியை சேர்ந்த முருகன், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். சேலம் மாவட்டம் சங்ககரி அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் முருகன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இதன் காரணமாக அதே பகுதியிலேயே வீடு எடுத்து தங்கி வசித்து வந்தனர். அப்போது மனைவியோ அடிக்கடி வேறு யாருடனோ அதிக நேரம் பேசி பொழுதை கழித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவ்வப்போது மனைவியை திட்டியுள்ளார். ஆனால் இதை கண்டு கொள்ளாத மனைவி அவரது அலைபேசி காதலை தொடர்ந்து கொண்டே இருந்துள்ளார்.
இதனால் மேலும் மனமுடைந்த முருகன் பெற்ற 2 குழந்தைகளையும் கொன்று விட்டு அதை வீடியோ எடுத்து அவரது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
