அரசு பள்ளியில் நடந்த அவலம்.. மாணவர்களை கால் அழுத்த விட்ட ஆசிரியர் - ஷாக் காட்சி!
அரசு பள்ளி ஆசிரியர் மாணவர்களை கால் அழுத்த விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி இயங்ஹி வருகிறது. அதில் கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பதித்து வருகின்றனர். அந்த பள்ளியின் கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷ் என்பவர் மாணவர்களை
தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இவர் குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம் எடுக்காமல் தூங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.
மாணவர்
இந்த நிலையில், வைரலாகும் வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. மாணவர்களை கால் அழுத்த கூறிய ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆசிரியர் ஜெய பிரகாஷூக்கு மாணவர்கள் கால் அழுத்திவிடும் காட்சிகள் வெளியானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.