சேலத்தில் கூண்டோடு கலைக்கப்பட்ட தேமுதிக: பாமக-வில் இணைந்தனர்
சேலம் ஒன்றியத்தில் தேமுதிக கூண்டோடு கலைக்கப்பட்டதுடன், நிர்வாகிகள் அனைவரும் பாமக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். சேலம் மேற்கு தொகுதிக்குட்பட்ட சேலம் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியின் செயல்பாட்டால் விரக்தியடைந்துள்ளனர். அதன் காரணமாக சேலம் ஒன்றியத்தில் தேமுதிக கூண்டோடு கலைக்கப்பட்டது.
அக்கட்சியில் இருந்து வெளியேறிய தொண்டர்கள் 500 க்கும் மேற்பட்டோர் பாமக வின் கொள்கையை ஏற்று, சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளரும் பாமக மாநில துணை பொது செயலாளருமான அருள் முன்னிலையில் பாமக வில் தங்களை இணைத்துக்கொண்டனர். பாமக வில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு வேட்பாளர் அருள் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
மேலும் பாமக வெற்றி பெற சிறப்பாக பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் போது, மாநகர மாவட்ட செயலாளர்கள் ரத்தினம், சாம்ராஜ், பசுமை தாயக மாநில துணை செயலாளர் சத்திரியசேகர் உள்ளிட்டோர் உடனிருந தனர்