9ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - 4 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி
சேலம் மாவட்டம், தலைவாசல், பெரியேரியைச் சேர்ந்தவர் காந்திசெல்வன். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படித்து வந்த மாணவியை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு காந்திசெல்வன், அந்த மாணவியை யாரும் இல்லாத இடத்தில் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.
இதனையடுத்து, மாணவி வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் இதைப் பற்றி கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் தலைவாசல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரை வழக்குப்பதிவு செய்த போலீசார், காந்திசெல்வனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த காந்திசெல்வனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.