சேலம் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் 1772 இல் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் சேலம் மாவட்டம் ஒன்றாகும். சேலம் மாவட்டங்களின் பரப்பளவு 5245 சதுர கி.மீ. இது நாமக்கல், தருமபுரி, ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களால் எல்லையாக உள்ளது.
மலைகளால் சூழப்பட்டதால் சேலம் என்ற பெயர் சைலம் (மலைகள்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேட்டூர், தாரமங்கலம் , தம்மம்பட்டி ,ஆத்தூர் , ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி ஆகியவை சேலம் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் ஆகும்.
சேலம் மாவட்டத்தில் திரு மணிமுத்தாறு, சரபங்கா ஆறு, சுவேத ஆறு, வசிட்ட நதி, வெள்ளாறு உள்ளிட்டவை ஓடும் முக்கியஆறுகள் ஆகும். சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக , கடந்த 2017ம் ஆண்டு ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டார்.
முதல் பெண் ஆட்சியர்
இளம் ஆட்சியராக வளம் வந்த இவர் கொஞ்ச நாள்களிலேயே தமிழகம் முழுவதும் வெகு பிரபலமடைந்தார். இவர் திடீரென27.6.2019 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் பணியிலிருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு இசை பல்கலைக்கழகப் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பிறகு, தற்போது நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, இந்த மாவட்டத்தின் இரண்டாவது பெண் ஆட்சியர் என்பதோடு, 174வது ஆட்சியர் என்ற சிறப்பையும் பெறுகிறார். சேலம் மாவட்ட ஆட்சியராக கார்மேகம் ஐஏஎஸ் அவர்கள் 19-05-2021 முதல் 28-01-2024 வரை பணிபுரிந்து வந்த நிலையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பிருந்தா தேவி ஐஏஎஸ்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, 1978ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பிறந்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பிரிவில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வந்த அவர், 2019ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இவர், ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு, டான்மேக் நிர்வாக இயக்குநராக சேலத்தில் சிறிது காலம் பணியாற்றி வந்துள்ளார்.