சேலத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர்: களைகட்டும் தேர்தல் களம்
election
edappadi
salem
By Jon
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் , அதிமுக சார்பில் 178 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். அந்த வகையில் சேலம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். வாழப்பாடி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக எம் எல் ஏ சித்ராவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ளார்.
மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கவுள்ள முதல்வரை வரவேற்க கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
இதனிடையே எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி வரும் மார்ச் 15 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.