காதம் மோகம்; 16 வயது சிறுமியுடன் உறவில் 17 வயது சிறுவன்; வீடியோவை அம்மாவுக்கே அனுப்பி வைத்த கொடூரம்!
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு எலக்ட்ரிக் வேலைக்கு சென்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
இருவரது காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கு தெரியவரவே, அவரது அம்மா சிறுமியை திருப்பூரில் சொந்தக்காரர் வீட்டில், தங்கவைத்து அங்கேயே பள்ளியில் சேர்த்து படிக்கவைத்துள்ளார். அங்கு சிறுமி 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
சிறுவன் வெறிச்செயல்
இதற்கிடையில் காதலியை காணாமல் தேடிய சிறுவன், சிறுமியின் அம்மா இவ்வாறு அவரை வேறு ஊருக்கு அனுப்பியதை அறிந்துள்ளார். தொடர்ந்து, அவரது சொந்தக்காரர்கள் யார் யார் என தேடி அலைந்துள்ளார். இறுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருப்பூரில் காதலி தங்கி படித்து வருவதை அறிந்த சிறுவன் அங்கு சென்று அவரை சந்தித்து காதலை வளர்த்துள்ளார்.
மேலும், சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோவை சிறுமியின் தாயாருக்கு அனுப்பியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் சிறுவனின் பெற்றோரிடம் சென்று விசாரித்ததில் அவர்கள் அவரை விரட்டி அடித்துள்ளனர்.
அதன்பின் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.