ரூ.10 க்கு உணவு வழங்கி ரூ.100 கோடி மோசடி - அலைமோதும் மக்கள் கூட்டம்

Money Salem
By Karthikraja Jan 24, 2025 08:08 AM GMT
Report

 பணத்தை இரட்டிப்பாக வழங்குவதாக கூறி ரூ.100 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.

ரூ.10 க்கு உணவு

சேலம் சேலம் அம்மாபேட்டை ஆத்தூர் மெயின்ரோட்டில் சிவகாமி திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த கடந்த ஆண்டு வேலூரை சேர்ந்த விஜயாபானு (55), என்பவர் இந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் அலுவலகம் நடத்தி வந்தார். 

சேலம்

முதலில் ரூ.10 க்கு உணவு வழங்கி வந்துள்ளார். இதனால் மக்கள் கூட்டம் அதிகரிக்கவும், பணத்தை முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இரட்டிப்பு பணம்

இதனை நம்பிய பலரும் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்துள்ளனர். மேலும் ஒரு லட்சம் கொடுத்தால் நாளை 2 லட்சம் கிடைக்கும் என நேற்று விளம்பரம் செய்துள்ளதால் கூட்டம் அலைமோதியுள்ளது. பணம் வாங்கி வைக்கவே 50 பேர் பணியாற்றியுள்ளனர். 

சேலம் பண மோசடி

இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து, நேற்று மாலை டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்ற போது, 200 க்கு மேற்பட்டோர் மண்டபத்தில் இருந்துள்ளனர். பணப்பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது. அங்கிருந்த மக்கள் காவல்துறையினர் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரூ.100 கோடி

இதுகுறித்து மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக துணை கமிஷனர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மண்டபத்தில் குவிக்கப்பட்டனர். பின்னர், அறக்கட்டளை தலைவரான விஜயாபானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர். 

சேலம் விஜயாபானு

முதற்கட்ட விசாரணையில், எந்த ஒரு ரசீதும் கொடுக்காமல் ரூ.100 கோடி வரை வசூலித்துள்ளது தெரியவந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. மண்டபத்தில் இருந்து ரூ.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.