தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் அறிவிப்பு..!
தமிழகம் முழுவதும் நாளை முதல் 500 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பெரியக்கருப்பன் தெரிவித்துள்ளார்.
தக்காளி ஒரு கிலோ ரூ.200க்கு விற்பனை
அண்மை நாட்களாக தக்காளி விலை கடும் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
தக்காளி விலை ரூ.60-ஆக இருந்த நிலையில,தற்போது கிலோ ரூ.200 வரை விற்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மாலை தலைமைச் செயலகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை நடத்தினார்.
நாளை முதல் 500 ரேசன் கடைகளில் விற்பனை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியக்கருப்பன் நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள 500 ரேசன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.
300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக 200 கடைகளில் தக்காளி விற்பனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
மாவட்டம் தோறும் சராசரியாக 10 முதல் 15 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை மேற்கொள்ளப்படும் என்றும்,
வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.