10 வருஷமா ஒரே இடத்தில் வசிக்கிறீங்களா? இதை கவனீங்க - தீவிர நடவடிக்கை!

Tamil nadu
By Sumathi May 09, 2024 04:55 AM GMT
Report

 விற்பனை பத்திரம் வழங்கும் பணிகள் துவங்கவுள்ளது.

விற்பனை பத்திரம் 

1977ல் சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், 1988ல் தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, தமிழக நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனை இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு,

sale deed

அந்த நிலங்களை வீட்டு மனையாக ஒதுக்க அரசு முடிவு செய்தது. இதில், மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்தி முடித்த நிலையில், அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இத்திட்டத்துக்கு பயன்படுத்திய நிலங்களின் உரிமையை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், பெரும்பாலானவர்கள் விற்பனை பத்திரம் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

10 ரூபாய் பண நோட்டுக்களை அள்ளி அள்ளி வீசிய நபர்...ஓடி வந்து எடுத்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ...!

10 ரூபாய் பண நோட்டுக்களை அள்ளி அள்ளி வீசிய நபர்...ஓடி வந்து எடுத்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ...!

நிர்வாகம் நடவடிக்கை

தொடர்ந்து, முறையான ஒதுக்கீட்டு ஆணையின்றி புதிதாக குடியேறியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, விற்பனை பத்திரம் வழங்க பலத்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் பேசுகையில்,

10 வருஷமா ஒரே இடத்தில் வசிக்கிறீங்களா? இதை கவனீங்க - தீவிர நடவடிக்கை! | Sale Deed To Occupants For 10 Years In Same Place

சென்னை பெருநகர் வளர்ச்சி திட்டம், தமிழக நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகியவற்றுக்கான பகுதிகளில், புதிதாக மக்கள் குடியேறி உள்ளனர். இவர்கள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்படி, இத்திட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்த குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்படும்.

இதன் அடிப்படையில் தகுதி உள்ள குடும்பங்களை ஒதுக்கீட்டாளர்களாக அங்கீகரித்து, அவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.