தினமும் 9 மணிநேரம் தூங்கினால் ரூ.1 லட்சம் சம்பளம்

india money champion wakefit
By Jon Mar 02, 2021 12:27 PM GMT
Report

இந்தியாவில் WakeFit நிறுவனம் தினமும் தூங்குவதற்காக ரூ. 1 லட்சம் சம்பளம் அறிவித்துள்ளது. நூறு நாட்களுக்கு தினமும் இரவில் குறைந்தது 9 மணி நேரங்கள் தூங்கினால் ரூ. 1 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த WakeFit நிறுவனம் மக்களின் தூக்க முறைகளை ஆய்வு செய்வதற்காக இந்த Sleep Internship-ஐ அறிவித்துள்ளது.

மற்றவர்களை விட அதிகமாக தூங்குபவர்கள் Sleep Champion of India பட்டத்தை வெல்லலாம். அவர்களுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும். இந்த இன்டர்ன்ஷிப்புக்கு ஏற்கனவே 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும், படுக்கைக்குச் சென்று 10 முதல் 20 நிமிடங்களுக்குள் தூங்க வேண்டும் என, இது போன்ற சில தகுதிகள் இருக்க வேண்டும் என கூறப்பட்ட்டுள்ளது.

இன்டர்ன்ஷிபிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மெத்தை மற்றும் ஒரு தூக்க கண்காணிப்பு கருவி வழங்கப்படும். நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதை இது உங்களுக்குத் தெரிவிக்கும்.