100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் - மத்திய அரசு அறிவிப்பு

Tamil nadu Government Of India Kerala Punjab
By Thahir Mar 28, 2023 04:39 AM GMT
Report

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது .

2023-2024 ஆண்டுக்கான ஊதிய உயர்வு அரசாணையை மத்திய ஊரக மேம்பட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006 -ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.

Salary hike for 100 day work plan

இது 100 நாள் வேலை என்பதினால் இந்த திட்டத்தை 100 நாள் வேலை திட்டம் என்றே அழைக்கப்படுகிறது. சம்பள உயர்வு இந்த வேலை முழுக்க முழுக்க உடல் உழைப்பை கொண்டுள்ள வேலை ஆகும்.

சம்பளத்தை உயர்த்திய மத்திய அரசு 

இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை மத்திய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(c)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது .

அதன் படி தமிழகத்தில் ஒரு நாள் குறைந்த பட்ச கூலித் தொகையாக ரூ .281-ல் இருந்து ரூ 294 ஆக உயர்த்தி வழங்கியுள்ளது.

ஹரியானா , கேரளா , கர்நாடகா , கோவா , பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இந்த குறைந்தபட்ச ஊதியம் ரூ 300 ஆக உயர்த்தி வழங்க நிர்ணயம் செய்துள்ளது மத்திய அரசு. ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால் 100 நாள் பணியாளர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.