சம்பளத்தை இருமடங்காக உயர்த்திய நடிகை நயன்தாரா! எவ்வளவு தெரியுமா?
நயன்தாரா தன் சம்பளத்தை ரூ. 5 கோடியில் இருந்து ரூ. 10 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது. நெற்றிக்கண் படத்தை விற்பனை செய்த பிறகு இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. அவர் படம் ஒன்றுக்கு ரூ. 4 முதல் 5 கோடி சம்பளம் வாங்குகிறார்.

அவர் படங்களில் நடிப்பதுடன் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை துவங்கி தயாரித்து வருகிறார். மேலும் நல்ல படங்களை வாங்கி வெளியிடவும் செய்கிறார்.
ரௌடி பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா பார்வையற்றவராக நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தின் பட்ஜெட் ரூ. 8 கோடி. அந்த படத்தை ரூ. 25 கோடிக்கு ஓடிடி நிறுவனம் ஒன்றிடம் விற்றுவிட்டார்களாம்.

நெற்றிக்கண் அதிக விலைக்கு போனதை பார்த்த நயன்தாரா தன் சம்பளத்தை உயர்த்த இதுவே சரியான நேரம் என்று முடிவு செய்திருக்கிறாராம். இதையடுத்து இனி ஒரு திரைப்படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குவதாக உள்ளாராம்.