தொடர் மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதி - அரசை சரமாரியாக கேள்வி கேட்ட தோனியின் மனைவி

MS Dhoni Power Cut Today
By Swetha Subash Apr 26, 2022 05:54 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் வெட்டு குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரி விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தொடர் மின்வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதி - அரசை சரமாரியாக கேள்வி கேட்ட தோனியின் மனைவி | Sakshi Singh Dhoni Raises Question Over Powercut

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ள சாக்‌ஷி, “மின்சாரத்தை சேமிக்க எங்களது கடமையை தொடர்ந்து செய்து வருகிறோம். இருந்தபோதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின் வெட்டு நிலவுகிறது?

பல ஆண்டுகளாக வரி செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் நிலவி வருவதால், மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.