தோனியுடன் வாழ்வது கஷ்டம் - சாக்ஷி கருத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடனான வாழ்க்கை முறை குறித்து அவரது மனைவி சாக்ஷி மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி மற்றும் சாக்ஷி ஆகியோர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அன்று காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக உள்ள இந்த தம்பதியினருக்கு ஷிவா என்ற மகள் உள்ளார்.
எப்போதும் தோனியின் சப்போர்ட்டர் என்ற வகையில் வாழ்க்கை முறையை தாண்டி கிரிக்கெட் விளையாடும் மைதானங்களிலும் சாக்ஷியின் ஆரவாரத்தை காணலாம். இதனிடையே மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் தோனியுடனான வாழ்க்கை முறை குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் தோனி போன்ற கிரிக்கெட் வீரர்களுடன் வாழ வேண்டும் என்றால் நாம் பலவற்றை பொறுத்துக்கொண்டும், மாற்றிக்கொண்டும் வாழ வேண்டும் எனக் கூறினார். குறிப்பாக எங்களுக்கென்று ப்ரைவசி என்ற ஒன்று இருக்காது. கேமரா முன்னர் எப்படி இருக்கிறோமோ அதனை போன்றே நிஜ வாழ்வில் இருக்க மாட்டோம்.
ஆனால் மறுபுறம் எங்களது கணவர்களால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என சாக்ஷி தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.