கூடிய சீக்கிரம் குட்டி தல வரப்போறார் : இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து தோனி - சாக்ஷி?

pregnant sakshidhoni secondchild
By Irumporai Oct 16, 2021 01:00 PM GMT
Report

சென்னை அணியின் வெற்றியையும், அதற்கு காரணமாக இருந்ததாக தோனியையும் சென்னை ரசிகர்கள் உச்சானிக் கொம்பில் வைத்து பாராட்டி வருகின்றனர்.

தோனியின் மனைவியான சாக்ஷியும் தனது கணவருடன் சேர்ந்து நேற்றைய வெற்றி கொண்டாட்டத்தில் அவரை இறுக்கமாக அணைத்துக்கொண்டார். அவர்களுடைய மகள் ஜிவாவும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த புகைப்படத்தில், சாக்ஷி தளர்வான மஞ்சள் ஆடை அணிந்திருப்பதைக் காணலாம். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா என்ற சந்தேகங்கள் எழுந்தன.

இந்த சந்தேகத்தை சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதிபடுத்தியுள்ளார். சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், 2022ல் குழந்தையை எதிர்பார்த்து இருவரும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தோனி மற்றும் சாக்ஷிக்கு ஏற்கனவே 2015ல் ஜிவா என்ற என்ற பெண் குழந்தை பிறந்தது. சமூக ஊடகங்களில் ஜிவாவிற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

இந்த நிலையில் , எம்எஸ் தோனி மிக விரைவில் தொடங்கும் டி 20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக இணைகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.