வாய்ப்புக்காக கிளாமர் காட்டுறோமா? அதுக்கெல்லாம் தைரியம் வேனும் - சாக்ஷி பளீச்!
கிளாமராக ஆடைகள் அணிவது குறித்து சாக்ஷி அகர்வால் பேசியுள்ளார்.
சாக்ஷி அகர்வால்
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால். நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில், இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், ஒருவர் கிளாமராக இருந்தால் அவர் நல்ல நடிகை இல்லை என்பது அர்த்தம் இல்லை.
கிளாமர் ஃபோட்டோ
அதே போல ஒரு நல்ல நடிகை கிளாமராக போட்டோ போடவில்லை என்றால் அதற்காக அவரும் நல்ல நடிகை இல்லை என்று ஒதுக்கி விட முடியாது. இந்த மனநிலை நிச்சயம் இங்கு மாற வேண்டும். கிளாமருக்கும் வல்காரிட்டிக்கும் இடையே இங்கு ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது.

பார்க்கிறவர்களின் மனநிலை தவறாக இருக்கிறது என்றால், அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. கிளாமராக ஆடைகள் அணிவது ஒன்றும் அவ்வளவு ஈஸியானது கிடையாது. அதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
அதை அணிவதற்கு அதற்கு ஏற்ற மாதிரியாக நம் உடலை ரெடி செய்வது, ஸ்டைலை கொண்டு வருவது என அதில் பல வேலைகள் இருக்கின்றன. அதனை எல்லோராலும் கைகொள்ள முடியாது.” எனத் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil