அதிபர் தேர்தலில் சஜித் விலகல்..உச்சகட்ட பரபரப்பில் இலங்கை!

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka
By Sumathi Jul 19, 2022 05:15 AM GMT
Report

இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் 

இலங்கையில் அண்மையில் நடந்த மக்கள் புரட்சியின் காரணமாக அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார். தற்காலிகமாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்று இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் சஜித் விலகல்..உச்சகட்ட பரபரப்பில் இலங்கை! | Sajith Withdrew Sri Lanka Presidential Election

நிரந்தர அதிபரை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சஜித் பிரேமதாச தனக்கான ஆதரவை தீவிரமாக திரட்டி வந்தார். தற்போது, வேட்புமனுத்தாக்கல் இன்று நடைபெறவிருந்த நிலையில் தான் விலகுவதான அறிவிப்பை விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாச

மேலும் இதுகுறித்து ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப்பெரும அதிபராக தெரிவானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.