இலங்கை போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது - சஜித் பிரேமதாச கண்டனம்

Sajith Premadasa Sri Lanka
By Nandhini Jul 22, 2022 07:41 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இலங்கை போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

அதிபர் மாளிகை சூறையாடல்

கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை ஆவேசமாக உள்ளே புகுந்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றார்.

மகிந்த ராஜபக்சே வெளியேற தடை

இதனையடுத்து, மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் ஜூலை 28ம் தேதி வரை இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்துள்ளது இலங்கை உச்சநீதிமன்றம். மேலும், நாட்டை விட்டு இருவரும் தப்ப வாய்ப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறாக இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிபரான ரணில் விக்ரமசிங்கே

தற்போது, இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சஜித் பிரேமதாச கண்டனம்

இந்நிலையில், போராட்டக் களத்தை காலி செய்ய சம்மதித்தப் பிறகும் அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தேவையற்ற ஈகோவும், முரட்டுத்தனமும் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதோடு இலங்கையின் சர்வதேச பிம்பத்தையும், இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனத்தை தெரிவித்துள்ளார்.   

Sajith-Premadasa