'இலங்கை அதிபராக யார் வந்தாலும் எங்களுக்கு உதவுங்கள்' - இந்தியாவிடம் உதவி கேட்ட சஜித் பிரேமதாச

Sajith Premadasa Sri Lanka President of Sri lanka
By Thahir Jul 20, 2022 04:10 AM GMT
Report

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

பொருளாதார நெருக்கடி 

இலங்கையில் கடும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்ததை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் நாளடைவில் மோதலாக மாறியது.இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டபய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து பிரதமர் மற்றும் அதிபர் தங்கள் பதவியிலிருந்து விலகி அந்நாட்டை விட்டு தப்பிச்சென்றனர்.

அதிபர் தேர்தல் 

இதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில் அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கானத் தோதல், இன்று நடைபெறவுள்ளது.இதற்கான வேட்பு மனுத்தாக்கல் செவ்வாய் கிழமை நடைபெற்றது.

முன்னதாக அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். தான் நேசிக்கும் நாடு மற்றும் மக்களின் நலனுக்காக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய பிரேமதாசா, டலஸ் அழகப்பெருமா அதிபர் பதவிக்கு முன்னிறுத்துவதாக அறிவித்தார்.

இந்தியாவிடம்  உதவி கேட்ட சஜித்

மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் அதிபராக தேர்வு செய்யப்படுபவருக்கு 113 பேரின் ஆதரவு தேவை. தற்போதைய சூழலில் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர், டலஸ் அலகப்பெருமாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.நாளை இலங்கையின் ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்களுக்கு உதவுங்கள் என இந்தியாவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இலங்கையின் ஜனாதிபதியாக நாளை யார் பதவியேற்றாலும் அது இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் இந்திய மக்களும் தாய் லங்காவிற்கு தொடர்ந்து உதவுங்கள், இந்த பேரழிவிலிருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.