பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சராக சஜித் ஜாவித் நியமனம்!
சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, முன்னாள் நிதி அமைச்சர் சஜித் ஜாவித்தை சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக், ஊரடங்கு விதிமுறைகளை மீறி முத்தம் கொடுத்த சம்பவத்தால் பெரும் சர்ச்சையில் சிக்கினார், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் மன்னிப்பும் கோரினார்.
ஆனால் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது ராஜினாமாவை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டார். அத்துடன், முன்னாள் நிதி அமைச்சர் சஜித் ஜாவித்தை சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.
ஜாவித் கடந்த ஆண்டு நிதி அமைச்சராக இருந்தபோது, அவரது அரசியல் ஆலோசகர்களை நீக்கும்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தினார்.
இதற்கு ஜாவித் மறுப்பு தெரிவிக்க அதிகார மோதல் காரணமாக ஜாவித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இப்போது மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.