பிறப்பில் சந்தேகம்..தத்து குழந்தையா.? பெற்றோரிடம் சண்டை போட்ட சாய் பல்லவி..
தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நாயகியாக வளம் வருகிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவி
மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாக சாய் பல்லவி, இன்றும் அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக இருக்கின்றார்.
தமிழை விட தெலுங்கு மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தெலுங்கில் நாகா சைதன்யாவுடன் ஒரு படம் என படு பிஸியாக இருக்கின்றார்.
உங்க குழந்தை தானா..?
இந்நிலையில், தான் இவர் குறித்து செய்தி ஒன்று பெரும் வைரலாகி வருகின்றது. அநேக நடிகர் நடிகைகளை குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் பயில்வான் தற்போது சாய் பல்லவி பற்றி பேசியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், நடிகை சாய் பல்லவி அவருடைய பெற்றோரிடம் ஒருமுறை நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? என்று சண்டை போட்டு இருக்கிறார். என்ன காரணம் என்றால் நான் வெள்ளையாக இருக்கிறேன்.. நான் அப்பா போலவும் இல்லை.. அம்மா போலவும் இல்லை… நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்றெல்லாம் வினவியதாகவும் கூறினார்.
மேலும், நிஜமாகவே நான் உங்களுக்கு தான் பிறந்தேனா..? அல்லது வேறு யாரிடமாவது இருந்து என்னை தத்து எடுத்து வந்து விட்டீர்களா..? அல்லது மருத்துவமனையில் மாற்றி கொடுத்து விட்டார்களா..? போன்ற கேட்டுகளை கூட கேட்டு சண்டை போட்டுள்ளார் சாய் பல்லவி என்ற அவர் கூறினார்.