பங்களாவில் ஆனந்த பூஜை - சிக்குவாரா சில்மிஷ சாமியார்!
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் வெளிநாட்டு தம்பதிகளை வைத்து ஆனந்த பூஜைகள் நடத்தி வரும் சாமியரை போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர்.
வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் பங்களா அமைத்து அதில் யாக பூஜைகள் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சாமியார் வெளிநாட்டு பெண்கள் மற்றும் ஆண்களை வைத்து சிறப்பு பூஜை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நடுநிசி வேளையில் என்ன பூஜை நடக்கிறது எப்படி இவை அரங்கேற்றுகிறார்கள். என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவே இருந்து வருகிறது இதுபற்றி அப்பகுதியில் விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல் களையும் தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இந்த சாமியார் உணவு என்பதை மறந்துவிட்டு 24 மணி நேரமும் நிதானமாகவே கஞ்சா போன்ற போதை வஸ்து களுக்கு அடிமையாகி இருக்கிறார் என்றும் விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள் மேலும் சமீபத்தில்
அப்பகுதியில் கரடி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததை தொடர்ந்து வனத்துறையினர் விசாரிக்கையில் இவரது பங்களாவிற்கு சென்று இவரையும் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன
இருப்பினும் காவல் துறையினர் இந்த மர்ம பங்களாவில் பற்றி விசாரணை செய்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.