துளி கூட இல்லை - விவாகரத்திற்கு பிறகு...இன்ஸ்டாவில் அதிர்ச்சி கொடுத்த சைந்தவி!!!
நடிகர் - இசைஅமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை விவாகரத்து செய்து புரிந்துள்ளார் பாடகி சைந்தவி.
சைந்தவி - ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் விவாகரத்து செய்து கொண்ட மற்றுமொரு நட்சத்திர தம்பதிகள் ஜிவி பிரகாஷ் - சைந்தவி. பள்ளி காலத்தில் உண்டான காதல், திருமண பந்தமாக மாறி தற்போது விவகாரத்தில் முடிந்துள்ளது.
பலரையும் அதிரவே செய்தது இவர்களது விவாகரத்து. காரணம், பல காதல் ஜோடிகளுக்கும் இவர்கள் couples goals கொடுத்து வந்தார்கள் ஒரு காலத்தில். இப்போதும் இவர்கள் சேர்ந்து விடுவார்களா? என காத்து கொண்டிருக்கும் சிலரும் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் நிலையில், முழுவதுமாக தங்களது உறவை முறித்து கொண்டுள்ள ஜிவி பிரகாஷ் - சைந்தவி தங்களது வாழ்க்கையில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்கள்.
மாற்றம்
பிரிவிற்கு பிறகு சில காலமாகவே, இன்ஸ்டாகிராமில் தனது பெயருக்கு பின்னால் இருந்த ஜிவி பிரகாஷ் என்பதையும் நீக்கிவிட்டார் சைந்தவி. வெறும் சைந்தவி என்றே தற்போது இவரது இன்ஸ்டா பக்க பெயர் உள்ளது.
இருவரின் டூயட் பாடல்கள் பெரிய ஹிட். எப்படியாவது இணைத்து விடுவார்களா? என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களுக்கு சைந்தவி அடுத்த கட்ட நகர்வால் இந்த ஜோடி இனி இணைய வாய்ப்பே இல்லை என கூறிவிட்டார்கள்.