நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு - போலீசார் அதிரடி - ரசிகர்கள் அதிர்ச்சி
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சித்த புகாரில், நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டார்.
அதற்கு நடிகர் சித்தார்த் பதிவு செய்த ஒரு டுவிட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. சாய்னாவின் கணவர், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், தனது பதிவுக்கு மன்னிப்புக் கேட்டார் நடிகர் சித்தார்த். சாய்னாவும் சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்றும் கூறி இருக்கிறார்.
இதனையடுத்து, கடப்பாவைச் சேர்ந்த இந்து ஜனா சக்தி பிரேரேனா என்பவர் அளித்த புகாரின் பேரில், சித்தார்த் மீது ஹைதாராபாத் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
இது தவிர சென்னை காவல் துறையினரும் சித்தார்த்தின் பதிவு குறித்து விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.