மன்னிப்பு கேட்ட பிறகும் வலுக்கும் சர்ச்சை - களத்தில் இறங்கிய தமிழக போலிஸ் DGP - விசாரணை வலையத்தில் சித்தார்த்?

Nandhini
in கிரிக்கெட்Report this article
ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து நடிகர் சித்தார்த் பதிவிட்ட டுவிட்டர் குறித்த சர்ச்சையால் எழுந்த புகாரை சென்னை போலீஸ் விசாரணையை துவங்கி இருக்கிறது.
கடந்த ஜனவரி 5ம் தேதி அன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால், பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். பிரதமர் மோடிக்கு ஆதரவாக We Stand With Modi எனும் டுவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது.
இந்த டுவிட்டர் ஹேஸ்டேக் டிரெண்டில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் கலந்து கொண்டார். அதில் ''ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு இருந்தால், எந்த ஒரு நாடும் பாதுகாப்பாக இருந்துவிட முடியாது, பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்'' என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
சாய்னா நேவாலின் இந்த டுவீட்டிற்கு பதில் கருத்தாக நடிகர் சித்தார்த், இழிவுபடுத்தும் வகையில் கடந்த 6ம் தேதி அன்று பதிலளித்தார். சித்தார்த்தின் டுவிட்டிற்கு பலர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.
சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிர காவல்துறை டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, நடிகர் சித்தார்த் கடந்த 10ம் தேதி அன்று, "தான் கூறிய பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக" டிவீட் செய்திருந்தார்.
இதன் பிறகு, பிரச்சினை பெரிதானதையடுத்து, நடிகர் சித்தார்த், டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டு, சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார். இந்த மன்னிப்பை சாய்னா நேவாலும் ஏற்றுகொண்டார்.
இந்நிலையில், சித்தார்த்தின் கொச்சை டிவீட் தொடர்பாக மகளிர் ஆணையம் எழுதியுள்ள புகார் கடிதத்தின் அடிப்படையில் தமிழக DGP சைபர் கிரைம் போலிசாரை இது பற்றி விசாரிக்க உத்தவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் DGP உத்தரவின் படி சைபர் கிரைம் போலிசார் விசாரனையை தொடங்கி உள்ளனர். புகாரின் முகாந்திரங்கள், டிவிட்டர் பதிவுகள், வல்லுனர்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஆய்வு முடிவுகளின் படி விசாரணை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.