முதல்வருக்கு நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திர பாபு!
தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் பதவியேற்றுக்கொண்டார். தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் திரிபாதியின் பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து டிஜிபியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றுக்கொண்டார்.
ஏற்கனவே டிஜிபியாக இருந்த திரிபாதி, பொறுப்புகளை சைலேந்திர பாபுவிடம் ஒப்படைத்து விடைபெற்றார். இவருக்கு பாரம்பரிய முறைபடி, வழியனுப்பி வைப்பு விழாவும் நடைபெற்றது. இதில் காவலர்கள் மரியாதையும் டிஜிபி திரிபாதி பதவி விலகி கொண்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பளித்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், போலீசார் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.