சாய் சுதர்சன் நீக்கம்; உண்மையில் நடந்தது இதுதான் - ஸ்ரீகாந்த் புது விளக்கம்
சாய் சுதர்சன் நீக்கம் குறித்து ஸ்ரீகாந்த் விளக்கமளித்துள்ளார்.
சாய் சுதர்சன் நீக்கம்
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடி வரும் நிலையில் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டார். இந்நிலையில் தெற்காசிய மைண்ட் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் செஸ் கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய ஸ்ரீகாந்த், "வாஷிங்டன் சுந்தருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவர் நம்ம ஊரு பையன். அவர் நல்ல பந்துவீச்சாளர், நல்ல ஆல்-ரவுண்டர்.
ஸ்ரீகாந்த் விளக்கம்
இந்த மாதிரி டெஸ்ட் தொடரை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாய் சுதர்சனை அவர்களாக நீக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவருக்கு முழங்கையில் ஏதோ காயம் இருப்பதாக ஒரு செய்தி படித்தேன். அவரை நீக்கி இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஏதேனும் காயம் பற்றி சுதர்சன் சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு போட்டி மட்டும் ஆடவைத்துவிட்டு அவரை நீக்கி இருந்தால், அது மிகவும் தவறானது. ஆனால், இது நீக்கியது போல எனக்கு தெரியவில்லை. இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வரவில்லை.
ஒரு போட்டியில் மட்டும் ஆட வைத்துவிட்டு நீக்கினால் இது அநியாயம். சாய் சுதர்ஷன் சரியாக விளையாடவில்லை என நான் இப்போதே முடிவு சொல்ல முடியாது. அனைத்து வீரர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும். அவர்கள் நிரூபிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் மட்டுமே அவர்கள் என்ன செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
