கிரிக்கெட் போட்டியில் இப்படியா அவுட் ஆகணும்? - தமிழக வீரருக்கு வந்த சோதனை
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன் அவுட் ஆன விதம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
— Jemi_forlife (@jemi_forlife) May 6, 2022
இதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 5 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
இதனிடையே இப்போட்டியில் குஜராத் அணியில் விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சன் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தினார். பொலார்ட் வீசிய பந்தை அடிக்க போய் நிலைதடுமாறிய அவர் ஸ்டம்ப்பை தாக்கி ஹிட் விக்கெட் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் தொடரில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார்.