மாறுவேடத்தில் சென்று தியேட்டரில் படம் பார்த்த நடிகை சாய் பல்லவி

Movie Watch Viral Video Sai Pallavi On Theatre
By Thahir Dec 30, 2021 12:18 PM GMT
Report

சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் சென்று நடிகை சாய் பல்லவி படம் பார்த்து இருக்கிறார்.

பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி.

மாரி 2, என் ஜி கே, பாவ கதைகள் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஷியாம் சிங்கா ராய் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் படத்தை ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீராமுலு திரையரங்கில் ரசிகர்களுடன் மாறு வேஷத்தில் படத்தை கண்டு ரசித்துள்ளார்.

யாரும் அடையாளம் காணமுடியாதபடி மாறுவேஷத்தில் சாய் பல்லவி திரையரங்கில் படம் பார்த்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது.