‘வேண்டவே..வேண்டாம்.. அவர் கூட மட்டும் நடிக்கவே மாட்டேன்...’ - பட்டென சொன்ன சாய் பல்லவி
சாய் பல்லவி
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
சிறுவயது முதல் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட சாய் பல்லவி 2008ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ என்ற நடனநிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதனையடுத்து, 2009ம் ஆண்டு இ.டி.வி. தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டேன்சு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதன் பின்பு, 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘பிரேமம்’ படத்தில் சாய் பல்லவி மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்த சாய் பல்லவிக்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்ததால், குறுகிய காலத்திலேயே சாய் பல்லவி முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
சாய்பல்லவி நடிக்க மறுத்த நடிகர்
இந்நிலையில், சமீபத்தில் சாய் பல்லவி பேட்டி ஒன்று கொடுத்தார். அந்த பேட்டியில், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா கூட மட்டும் ஜோடியாக சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று பட்டென கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த பேட்டியில் சாய் பல்லவி கூறுகையில், நான் பல படங்களில் குடும்பப்பாங்கான கதையையும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஆனால், நடிகர் விஜய் தேவரகொண்டா கூட நடிக்க மட்டேன் என்று கூறினார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சாய்பல்லவி இப்படி சொல்ல வேறொரு காரணமும் உள்ளதாம். அது என்னவென்றால், விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்தில் முதலில் சாய் பல்லவி தான் நடிக்க இருந்தாராம். ஆனால், அப்படத்தில் அதிக முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இதனால், அப்படத்திலிருந்து சாய்பல்லவி விலகினாராம்.
இவர் விலகியதால் அப்படத்தில் நடிகை ராஷ்மிகா நடித்தாராம். இதனால்தான் விஜய் தேவரகொண்டாவுடன் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று முடிவெடுத்ததாக பேசப்பட்டு வருகிறது.